கிறிஸ்மஸ் தீவில் கலவரம்

இந்து சமுத்திர தீவான கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கலவரம் வெடித்துள்ளது.

பேஸ்பால் பாட்டுகளை ஆயுதமாக கொண்டுள்ள தடுப்புக் காவல் கைதிகள் கட்டிடங்களுக்கு தீ வைத்ததுடன் காவலர்களை துரத்தியும் உள்ளனர்.

அங்கு ஒரு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தடுப்புக்காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற தஞ்சம் கோரி ஒருவரின் சடலம் அங்குள்ள மலையடிவாரத்தில் மீட்கப்பட்டதை அடுத்த இந்த பதற்ற நிலை தோன்றியது.

அங்குள்ள நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ள எதிர்க்கட்சி செனட்டர் ஒருவர் அரசாங்கம் பதற்றத்தை தணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

Courtesy BBC Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>