போஷாக்கின்மைக்கு எதிரான அஸ்ட்ரா மார்ஜரினின் விழிப்புணர்வு பிரசாரம்

நாட்டில் சிறுவர் சிறுமியின் மத்தியில் பரவலாகக் காணப்படும் போஷாக்கின்மையை மட்டுப்படுத்தும் இலக்கோடு புதிய செயற்திட்டமொன்றை யுனிலீவர் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற உணவுப் பண்டமான அஸ்ட்ரா மார்ஜரின் முன்வைத்திருக்கிறது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பை சமீபத்தில் கொழும்பில் நடத்திய அஸ்ட்ரா மார்ஜரின் தயாரிப்பாளர்கள், எளிமையான ஆனால் சத்துள்ள உணவுப் பொருட்களை அடையாளம் காட்டுவது, தயாரிப்பது, போஷாக்கு உணவுகள் தொடர்பான அறிவை அன்னையர்களுக்கு ஊட்டுவது போன்றவை மூலம் சிறுவர்கள் மத்தியில் காணப்படும் போஷாக்கின்மையை குறைக்க முடியும் என்ற கருத்தை இங்கே முன்வைத்தார்கள்.

வயம்ப பல்கலைக்கழக போஷாக்கு நிபுணரா¡ன டாக்டர் ரேணுகா சில்வா இங்கு உரையாற்றிய போது இலங்கை சிறார் மத்தியில் 25 முதல் 30 சதவீதமான போஷாக்கின்மை தொடர்ச்சியாகக் காணப்படுவதாகவும் துத்தநாகம், இரும்பு, உயிர்ச்சத்து ஏ ஆகியன இவர்களிடம் குறைந்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிடைக்கும் உணவுகளை பழகிப்போன முறைகளில் தயாரித்து கொடுக்கும் வழக்கமே தாய்மார் மத்தியில் காணப்படுவதாகவும், கிராமங்களில் அல்லது அந்தந்த பிரதேசங்களுக்கே உரிய உணவுப் பண்டங்களைப் பயன்படுத்தி சத்தான உணவுகளைத் தயாரித்து கொடுப்பது, சிறுவர்கள் விரும்பும் வகையில் ருசியாக சமைத்துக் கொடுப்பது ஆகிய முறைகளை தாய்மாருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது என்று இவர் சுட்டிக்காட்டினார்.

அஸ்ட்ரா மார்ஜரின் ஐம்பது ஆண்டுகளாக இலங்கையெங்கும் விரும்பிப் பயன்படுத்தப்படும் உப உணவாக விளங்கி வருகிறது.

சமையலிலும், பல உணவுப் பொருட்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வரும் எஸ்ட்ரா மார்ஜரின், இலங்கையின் மார்ஜரின் தேவையில் 88 சதவீதத்தைப் பூர்த்தி செய்து வருகிறது.

எஸ்ட்ரா மார்ஜரினில் உயிர்ச் சத்து ‘ஏ’ மற்றும் ‘டீ’ அடங்கியுள்ளதோடு இருபது கிராம் மார்ஜரின் 30 சதவீதமான சக்தி தேவையை பூர்த்தி செய்வதாகவும் இல்லத்தரிசிகள் தமது தினசரி உணவு தயாரிப்பில் எஸ்ட்ரா மார்ஜரின் உபயோகிப்பதன் மூலம் சிறுவர்களின் சக்தி தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்ய முடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் குருணாகலையில் எஸ்ட்ராவின் முதல் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.

அன்றை தினம் சிறுவர்களின் உயரம் மற்றும் எடை சரிபார்க்கப்பட்டு நிரல்படுத்தப்பட்டு வருகை தந்திருக்கும் மருத்துவர்கள் மற்றும் உணவு தொடர்பான நிபுணர்களின் ஊடாக தாய்மார்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. \

கிராம மட்டத்தில் கிடைக்கும் சத்தான உணவுப் பண்டங்கள் மூலம் ருசியான உணவுகளைத் தயாரித்து சிறார்களுக்கு அறிப்பது எப்படி என்பது பற்றி எடுத்துச் செல்லப்படும்.

பின்னர் நாடெங்கும் இத்தகைய அஸ்ட்ரா சந்திப்புகள் நடைபெறவுள்ளன. மக்களிடையே சத்துணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யுனிலீவர் தயாரித்திருக்கும் ஒரு கார்டூன் சித்திரமும் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>