மியன்மாரின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

பல தசாப்த இராணுவ அட்சிக்கு பின் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறை வெளிப்படையான போட்டி நிலவும் மியன்மார் பொதுத் தேர்தலில் நேற்று ஞாயி ற்றுக்கிழமை மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர் ஜனாதிபதி பத வியை வகிப்பது சட்டத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவத்தின் ஆதரவு கொண்ட ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி கடந்த 2011 இல் இருந்து ஆட்சியில் உள்ளது. யங்கோன் நக ரில் சூச்சி தனது வாக்கை பதிவுசெய்ததோடு நாடெ ங்கும் வாக்குப்பதிவுக்காக வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டதாகவும் சில வாக்குச் சாவடிகளில் சூரியோதயத்திற்கு முன்னரே நீண்ட வரிசை இருந்ததாகவும் அங்கி ருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின் றன.

“ஜனநாயகத்தின் எழுச்சிக்காக நான் எனது சிறிய மாற்றத்தை செய்தேன்” என்று தனது வாக்கை அளித்த ஆசிரி யர் ஒருவர் ராய்ட்டருக்கு குறிப்பிட்டார்.

பர்மா என்றும் அழைக்கப்படும் மிய ன்மாரில் சுமார் 30 மில்லியன் பேர் வாக் களிக்க தகுதி பெற்றிருப்பதோடு இன்று திங்கட்கிழமை காலையாகும்போதும் தேர் தல் முடிவுகள் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு மியன்மா ரில் சிவில் அரசொன்று ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெறும் முதலாவது தேசிய தேர்தலான இந்த தேர்தலில் பாராளு மன்றத்தின் 664 இடங்களுக்காக 90க்கும் அதிகமான கட்சிகளில் இருந்து 6,000க்கும் அதிக மான வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். எனி னும் பாராளுமன்றத்தில் 25 வீதமான ஆசனங்கள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தட்போது ஆட்சியில் இருக்கும் ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சியுடன் இணைந்து கொள்வார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மார் அரசியலமைப்பில் வெளிநாட்டு சந்த தியை கொண்டவர்களுக்கு ஜனாதிபதி பதவி வகி க்க தடை விதிப்பட்டுள்ளது. எனவே அமைதிக்கான நோபல் விருது வென்ற சூச்சியின் குழந்தைகள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் அவர் ஜனாதிபதி பதவியை வகிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற வேண்டுமாயின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி 67 வீத வாக்குகளை வெல்ல வேண்டி உள்ளது. தனது கட்சி வெற்றி பெற்றால் தானே ஆட்சி அமைப்பதாகவும் தனது அதிகாரம் ஜனாதி பதிக்கு மேல் இருக்கும் என்றும் சூச்சி கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்;டிருந்தார்.

வரப்போகும் தேர்தல் முடிவை தான் ஏற்பதாக ஜனாதிபதி தெயின் செயின் அறிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை இருள் வேளையிலேயே ஒரு சில வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துள்ளனர். யங்கோன் நதிக்கு இடை ப்பட்ட சிறுநகரான கியி மியினில் சூரியன் உதிக் கும்போதே வாக்களிக்க வந்தோரது வரிசை வீதி யையும் தாண்டியிருப்பதை காணமூடிந்ததாக ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் அனை த்து வயதுடையவர்களும் வரிசையில் காத்திருந் ததை காணமுடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அரசொன்றை அமைப்பதற்கு வாய்ப்பு கிட்டாத நிலையில் முதல்முறை அவ்வா றானதொரு வாய்ப்பை பெற்றிருப்பதே மக்களின் ஆர்வத்துக்கு முக்கிய காரணம் என அவதானி கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ் லிம்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களது வாக் குரிமை மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தேர் தலின் நியாயத்தன்மை குறித்து கவலை எழுந்து ள்ளது. அதேபோன்று நாட்டில் எந்தவொரு கருத் துக் கணிப்புகளும் இல்லாத நிலையில் மக்கள் மாத்தியில் குழப்பமும் நிலவுகிறது.

எனினும் இந்த தேர்தலை ஐ.நா. மன்றம் நாட் டின் ஜனநாயக மாற்றத்திற்கான திருப்புமுனை யான தருணம் என்று விபரித்துள்ளது.

தேர்தலையொட்டி நாடெங்கும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருந்ததோடு வாக்குச் சாவடிகளின் பாது காப்பு பணிகளுக்காக 40,000 பொலிஸார் நிறுத்த ப்பட்டுள்ளனர். தேர்தல் தினத்தில் வன்முறைகள் இடம்பெற்றதாக எந்த செய்தியும் வெளியாகவி ல்லை.

மியன்மாரில் சுமார் அரை நூற் றாண்டு இராணுவ ஆட்சிக்கு பின் னர் அண்மைய ஒருசில ஆண்டு களிலேயே அரசியல் மற்றும் பொரு ளாதார சீர்திருத்தங்கள் அறிமுக ப்படுத்தப்பட்டன.

சூச்சி ஏற்கனவே தேர்தல் மோசடி மற்றும் ஒழுங்குமுறையற்ற வாக் குப்பதிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1990 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றியீட்டி யபோதும் அதனை இராணுவம் ரத் துச் செய்ததோடு சூச்சி தொடர்ச் சியாக 2010 ஆம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட் டார்.

Courtesy-Thinakaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>