தொற்றா நோய் நாட்டிற்கு பெரும் சவால்; நால்வரில் ஒருவருக்கு இரத்த அழுத்தம்

Maithiripalaதொற்றா நோய்களின் பாதிப்பு நாட்டி ற்கு பெரும் சவாலாக இருக்கிறது. நான்கு பேரில் ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் ஏற்படும் அவதானம் காணப் படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் மக்களை அறிவூட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் இதற்கு இலங்கை மருத்துவ சங்கம் பெரும் பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

தொற்றா நோய்கள் குறித்து மக்களை அறிவூட்டுவதற்காக மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் முன்பாக இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நாளாந்தம் பெருமள வான மக்கள் தொற்றா நோய்களுக்கு இலக்காகி வருகின்றனர். நான்கு பேரில் ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் ஏற்படும் அவதானம் இருக்கிறது.

தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கு அதிக உப்பு, எண்ணெய், கோதுமை மா. சீனி கலந்த உணவுகள் மட்டுமன்றி அதிக புகைப்பழக்கம், மதுபான பாவனை உடற்பயிற்சியில் ஈடுபடாமை என்பனவும் காரணமாக அமைகிறது என்றார்.

நாட்டிலுள்ள சுமார் 21 மில்லியன் மக்களின் சுகாதார நிலைமை குறித்தும், தேகாரோக்கியம் தொடர்பாகவும் இலவச சுகாதார சேவை முன்னெடுக்கும் சேவை போன்றே சகல துறைகளும் வழங்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

தொற்றா நோய் எமது நாட்டுக்கு மட்டுமன்றி பல்வேறு நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. எமது சுகாதார சேவையில் சிகிச்சை வழங்குதல் வழிகாட்டல் என்பன போன்றே மக்களின் அன்றாட வாழ்க் கையை ஒழுங்குபடுத்தவும் இலங்கை மருத்துவ சங்கம் பெரும் பங்காற்றுகிறது என்றார்.

Thinakaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>