இலங்கையுடன் உறவைப் பேணுவது இந்தியாவுக்கு அவசியம்

இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் அந்நாட்டுடனான உறவு தொடர்வது அவசியம் என்று தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒரு வருமான மணிசங்கர் ஐயர் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இருவேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் மணிசங்கர் ஐயர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பிரதமர் உட்பட யாரும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.(Courtesy Thinakaran)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>