சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி

thondaஇந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் இந்திய வம்சாவளி- மலையகத் தமிழர்களின் தேவைகள் குறித்தும் அவற்றுக்கு இந்திய உதவியைப் பெற்றுக்கொள்வது பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக ஆறுமுகன் தொண்டமான் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தாம் விடுத்த அழைப்பின் பேரில், மலையகத் தமிழர்களை சந்திப்பதற்காக தூதுக்குழுவொன்றை அனுப்புவதற்கு சோனியா காந்தி சம்மதித்தாகவும் அவர் கூறினார்.

’13ம் திருத்தம் பற்றி பேசவில்லை’

இதேவேளை, இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் பற்றியோ, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றியோ தாம் எதுவும் பேசவில்லை என்றும் மலையக மக்களின் கல்வி, சுகாதார மற்றும் அடிப்படைத் தேவைகள் பற்றியே பேசியதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் தெரிவித்தார்.

அரசியல் ரீதியான பிரச்சனைகளை இலங்கை அரசாங்கத்துடனே பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய வல்லமை தமது கட்சிக்கு இருப்பதாகவும் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

இந்தியாவிடமிருந்து கடந்த காலங்களில் மலையகத் தமிழர்களுக்கென பல்வேறு உதவித்திட்டங்கள் கிடைத்ததாகவும் அவை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு உதவ வேண்டிய கடமை இந்தியாவுக்கு இருப்பதாலேயே அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தமிழோசை எழுப்பிய கேள்வியொன்றுக்கு அளித்த பதிலில் தொண்டமான் கூறினார்.

ஆறுமுகன் தொண்டான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் மகிந்த ராஜபக்ஷ கூட்டணி அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.(BBC)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>