கூடங்குளம் தீர்ப்பு – ராணுவத்தைப் போலவே நீதி மன்றங்களும் மக்களுக்கு எதிரானாவையா…?

koodanபூவுலகின் நண்பர்கள் அணு உலையை திறக்கக் கூடாது என்று தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது இவ்வாறு.

247 பக்கங்கள் அடங்கிய இந்த தீர்ப்பு ஒரு சில பக்கங்களில் தெளிவாக இவ்வாறு கூறுகிறது.

15 அம்ச உத்தரவு : அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், இந்திய அணுசக்திக் கழகம், இந்திய அணுசக்தி துறை ஆகியவற்றின் இறுதி ஒப்புதல் கிடைத்தே பிறகே கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

அதன் பின்னர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அணு சக்திப் பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் அணு மின் நிலையத்தில் ஆய்வு நடத்திக் குறைகளைக் களைய வேண்டும்.இவ்வாறு பல பாயிண்டுகளை சொல்லிவிட்டு, மேலும்,

பயன்படுத்தப்பட்ட எரிபொருளை வெளியே கொண்டு செல்லாமல் அந்த நிலையத்துக்கே உள்ளேயே நிரந்தரமாகப் பாதுகாப்புடன் சேமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணு மின் நிலையம் செயல்படுவதால் தங்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அணு மின் நிலையங்கள் அமைப்பது வாழ்வுரிமையைப் பறிப்பதற்காக அல்ல, வாழும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவே என நீதிமன்றம் கருதுகிறது.

பொது நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்க இதுபோன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும், நிலக்கரி,
எண்ணெய், எரிவாயு போன்றவைகளுக்கு மாற்று எரிசக்தியாகவும் வருங்காலத்தில் அணு மின் சக்தியின் தேவை அவசியமாகிறது என்று கூறியுள்ளது நீதிமன்ற தீர்ப்பு…!

ரசிய நாட்டின் உதவியோடு அமைக்கப்படும் அணு மின் நிலையம் மின்சாரம் மட்டும் தயாரிக்கிறது என்று சொல்வது நாட்டின் அணைத்து மக்களையும் நீதிமன்றங்கள் எந்த அளவிற்கு மதிக்கிறது என்பதை காட்டுகிறது.

ரசிய நிறுவனத்தின் ஊழல், தரமற்ற உதிரி பாகங்கள்..என்று பல்வேறு குழப்படிகளை சந்தித்தாலும் பரவாயில்லை..அணு மின் நிலையத்தை திறந்து கழிவுகளை அங்கேயே புதைக்க வேண்டும்..

மனித குல சந்ததியினர் குறித்து கவலையில்லை…இது போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம்…என்பது ரசிய நிறுவனமும் இந்திய நிறுவனங்களும் கொள்ளை அடிப்பதற்காக என்று கருதலாமா…?

உலகில் அணு ஆயுதங்களே கூடாது என்று பெருவாரியான மக்கள் கூறிவருகையில், மக்களாவது ….வது என்று அணு மின் நிலையத்தின் அவசியம் குறித்து கூறுவது ஏன்…?

ஆக, இனி கூடங்குளம் பகுதி அணு உலை நிரம்பிய பகுதியாக. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக, தாமிரபரணி ஆற்றை திருப்பி அணு உலைக்கு கொண்டு செல்லும் பகுதியாக மாறுவதற்கு, அங்குள்ள மக்களை அடித்து விரட்டுவது என்று பணிகள் வெகு வேகமாக நடக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியுமா…?

சங்கிலிக்கருப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>