காதலியை கைப்பிடிக்கும் ஜி.வி. பிரகாஷ்!

17gvprakashhதமிழ் திரையுலகில் பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது ஜி.வி.பிரகாஷ்தான். தயாரிப்பில் இருக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தயாரிப்பாளராகவும் அவதரித்து இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகக் பாடகி சைந்தவியை காதலித்து வந்தார். இருவருமே பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள் ஆவர். படங்களில் தொடர்ந்து மும்முரமாக பணியாற்றி வந்ததால் திருமணத்தினை தள்ளி வைத்து வந்தார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு எனது திருமணம் நடைபெறும் என்று ஜி.வி.பிரகாஷ் பேட்டியளித்து இருந்தார். அது போலவே ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி திருமணம் ஜுன் 27ம் தேதி நடைபெற இருக்கிறது.

சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. 19ம் தேதி ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாக இருக்கும் ‘உதயம் NH4′ படத்தில், இவர்கள் இணைந்து பாடிய ‘யாரோ இவன்’ பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

(Courtesey-Vikatan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>