விஜய்யின் வித்தியாச செலக்சன்!

17vijaayவிஜய்யிடம் எப்படியாவது கதைச் சொல்லி அவரிடம் கால்ஷீட் தேதிகள் மட்டும் வாங்கிவிட வேண்டும் என்று பல முன்னணி இயக்குனர்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் ‘ஜில்லா’ படத்தின் இயக்குனர் நேசன் ஒரு புதுமுக இயக்குனர். அவருக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என்று பலரும் வியந்தார்கள். அவருக்கு எப்படி அந்த வாய்ப்பு வந்தது தெரியுமா?

‘வேலாயுதம்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு. தனது படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நாளில் அப்படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் விருந்தளிப்பது, பரிசளிப்பது விஜய்யின் வழக்கம். இன்று விஜய் தரப்போகும் பரிசென்ன? காலையிலிருந்தே ஒரு சர்பிரைஸ் மனசுடன் காத்திருக்க ஆரம்பித்தார்கள் உதவி இயக்குனர்கள். லஞ்ச் பிரேக்கின் போது விஜய்யிடம் பேசிய வேலாயுதம் இயக்குனர் ராஜா, ‘பசங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. அவங்களுக்கு என்ன கொடுக்க போறீங்க? எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன்’ என்று காதை கடிக்க, லேசாக புன்முறுவல் பூத்தபடியே பேச ஆரம்பித்தார் விஜய்.

‘யாரும் எதிர்பார்க்காத கிஃப்ட் கொடுக்கப் போறேன் அவங்களுக்கு. ஏன், நீங்க கூட இதை எதிர்பார்க்க மாட்டீங்க’ என்றார். ‘சர்ப்பிரைசை நம்ம தலையில ஏத்தி வச்சுட்டாரே’ என்ற படபடப்புடன் அங்கிருந்து கிளம்பிய ராஜா, மாலை வரைக்கும் பரபரப்புடன் காத்திருக்க, அந்த அழகான மாலை நேரமும் வந்தது.

ஏழு உதவி இயக்குனர்களையும் அருகில் அழைத்த விஜய், ‘உங்க அத்தனை பேருகிட்டேயும் நான் கதை கேட்க போறேன். யார் கதை பிடிச்சிருக்கோ, அவங்களுக்கு இந்த வருஷமே என் கால்ஷீட்’ என்று சொல்ல, உதவி இயக்குனர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்கள். ஆனால் கடைசி உதவி இயக்குனருக்குதான் பெரிய குழப்பம்.

இந்நிலையில் அதிலும் ஒரு ஆச்சர்யத்தை வைத்தார் விஜய். ‘நான் கதை கேட்கப்போறது அசோசியேட் இயக்குனர்களில் இருந்தல்ல, முதல்ல கடைசி உதவி இயக்குனர் கதை சொல்லட்டும். அது ஒரு வரியில் இருந்தாலும் சரி. ஒரு மணி நேரத்தில் அமைந்தாலும் சரி. நான் இப்பபடம் இயக்கவே தயாரா இல்லேன்னு சொன்னாலும் பரவால்ல. அவர் எப்ப தயாராகி வர்றாரோ, அன்னைக்கு அவருக்கு என்னோட கால்ஷீட் உண்டு. ஆனால் எனக்கு அவர் கதை பிடிச்சிருக்கணும். அது ரொம்ப முக்கியம்’ என்றாராம்.

அதற்கப் பிறகு சுமார் ஒரு வாரத்திற்குள் அத்தனை பேர் கதையையும் விஜய் ஆற அமர பொறுமையாக கேட்டார். அதில் செலக்ட் ஆனவர்தான் நேசன். தற்போது ‘ஜில்லா ‘ படத்தை இயக்கப் போகிறாரே அவர் தான்.

(Courtesey-Vikatan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>