திருமண ஆசை இல்லாத நடிகை

trishநடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>