ஃபார்முலா ஒன் சீன கிராண்ட் பிரி: அலோன்ஸோ சாம்பியன்

130414140154_alonso_304x171_e_nocreditசீன பார்முலா ஒன் கிராண்ட் பிரி பந்தயத்தை ஃபெர்ராரி அணியின் ஃபெர்னாண்டோ அலோன்ஸோ வென்றுள்ளார்.

ஷாங்காய் நகரத்து இண்டர்நேஷனல் பந்தயப் பாதையில் நேற்று ஞாயிறன்று நடந்த போட்டியில் புத்திசாலித்தனமாக கார் ஓட்டி லோடஸ் அணியின் கிமி ரெய்க்கொனெனை அலோன்ஸோ வீழ்த்தினார்.

ரெய்க்கொனெனை விட பத்து வினாடிகள் குறைவான நேரத்தில் போட்டி தூரத்தை அலோன்ஸோ கடந்தார்.

நடப்பு உலக சாம்பியனான ரெட்புல் அணியின் செபாஸ்டியன் வெட்ட்லை முந்திக்கொண்டு மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹாமில்டன் மூன்றாம் இடத்தில் வந்தார்.

பந்தயத்தை வென்ற பின்னர் கருத்து சொன்ன ஃபெர்னாண்டோ அலோன்ஸோ, இந்தப் போட்டியில் தான் விரும்பிய முடிவு கிடைத்துள்ளது என்றும், அனல் பறக்கும் விறுவிறுப்புடன் நடந்த போட்டியை தான் வென்றது பெரிய மகிழ்ச்சி தருகிறது என்றும் கூறினார்.

கடந்த 12 கிராண்ட் பிரி பந்தயங்களில் வெற்றி பெறாமல் இருந்துவந்த அலோன்ஸோ, இந்த முறை நல்ல முன்னணியுடன் வெற்றி பெற்றுள்ளார்.

அலோன்ஸோவின் இந்த வெற்றியோடு பார்க்க கடைசியாக நடந்த மூன்று ஃபார்முலா ஒன் பந்தயங்களில் வெவ்வேறு வீரர்கள் சாம்பியனாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(BBC)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>