போலிஸ் தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார் முஷாரப்

pervezபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இஸ்லாமாபாத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு காவல்துறை தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு முன்னர், நீதிபதிகளை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்ததாக சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான அவர், பின்னர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

முஷாரப் காலத்தில் நீதிபதிகளின் பாதுகாப்புக் கருதியே, அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக அப்போது அதிகாரிகள் கூறியிருந்தனர்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று முஷாரப் வாதிடுகின்றார்.

இதேவேளை, 2007-ம் ஆண்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, அதிபர் முஷாரப் தேசத்துரோகம் புரிந்துள்ளதாகவும் அதற்காக அவர்மீது விசாரணை நடத்தவேண்டும் என்றும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் செனட்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(BBC)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>